மீயல்லையைப் பிறப்பிடமாகவும் வெலிகமையை வதிவிடமாகவும் கொண்ட ஆங்கில ஆசிரியர் யூஸுப் மற்றும் ஆசிரியை றபியுல்லுஹா ஆகியோரின் புதல்வி பாத்திமா நப்லா அண்மையில் நடாத்தப்பட்ட இலங்கை நிர்வாக சேவை பரீட்சையில் (SLAS) சித்தி பெற்று நிர்வாக சேவைக்குத் தெரிவாகியுள்ளார் .
மேலும் இலங்கை நிர்வாக சேவைக்கு எமது ஊரில் இருந்து தெரிவான முதலாமவர் என்ற பெருமையையும் அவர் ஊருக்குப் பெற்றுத் தருகிறார்.
பாத்திமா நப்லா 6ஆம் வகுப்பு வரை மீயல்லை ,அல்மினா முஸ்லிம் மகா வித்தியாலயத்திலும் அதனைத் தொடர்ந்து சாதாரண தரப் பரீட்சையை வெலிகமை அரபா தேசிய பாடசாலையிலும் மேற்கொண்டு G.C.E(OL) பரீட்சையில் 8A,B,C பெறுபேற்றை பெற்றுக்கொண்டார் .தொடர்ந்து தனது உயர்தர கற்கை நெறியை கல்முனை ,அல்-மஹ்மூத் மகளிர் கல்லூரியில் கணித பிரிவில் நிறைவு செய்து G.C.E(AL) பரீட்சையில் B, 2C பெறுபேற்றை பெற்று கொழும்பு பல்கலைக்கழக விஞ்ஞான பிரிவுக்குத் தெரிவாகி தனது இளமானிப் பட்டத்தை Bachelor Of Science , Special in Mathematical Finance (2nd class lower) பெற்று தற்போது இலங்கை கட்டுமானத் துறை திணைக்களத்தில் நிருவாக உதவியாளராக பணி புரிந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது .
-மீயல்லை ஹரீஸ் ஸாலிஹ்
No comments:
Post a Comment