World Cube Association (WCA) மூலம் உலகளாவிய ரீதியில் நடாத்தப்பட்டு வரும் Rubik's Cube போட்டி அண்மையில் குவைத் நாட்டில் நடாத்தப்பட்டது. இதின் பல பிரிவுகளிலும் 26 நாடுகளைச் சேர்ந்த 60 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர்.
இதில் குவைத்தில் கல்வி கற்கும் இலங்கை மாணவன் அப்துல் அஸீஸ் ஹரீஸ் Skewb பிரிவில் 6.77 செக்கன்களில் முடித்து தேசிய மட்டத்தில் சாதனை படைத்து இலங்கைக்கு பெருமை சேர்த்துத் தந்துள்ளார்.
கௌரவத்துக்குரிய குவைத்துக்கான இலங்கை தூதுவர் காண்டீபன் பாலசுப்ரமணியம், இன்று (17.02.2019) அப்துல் அஸீஸ் ஹரீஸை குவைத் இலங்கை தூதரகத்துக்கு அழைத்து, கௌரவித்து உற்சாகமூட்டியமை குறிப்பிடத்தக்கது.
- Haris Salih
No comments:
Post a Comment