தேசிய அரசமைத்துள்ளதாகவும் அதனடிப்படையில் அமைச்சரவையின் எண்ணிக்கையை அதிகரிக்க நாடாளுமன்றம் அனுமதிக்க வேண்டும் எனவும் இன்று காலை ஐ.தே.க தரப்பினால் முன் வைக்கப்பட்ட பிரேரணை தெளிவில்லாத செயற்பாடு என விமர்சித்துள்ளது ஜே.வி.பி.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடனா அல்லது யாருடன் இணைந்து தேசிய அரசு உருவாக்கப்பட்டுள்ளது என்பது தெளிவு படுத்தப்படவில்லையெனவும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசுடன் இணைவதே தேசிய அரசென தெரிவிக்கப்படுமாக இருந்தால் அது வெட்கத்துக்குரிய செயல் எனவும் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
ஏலவே ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்துள்ள முஸ்லிம் காங்கிரஸ், தனித்துப் போட்டியிட்ட வகையில் ஒரு நாடாளுமன்ற உறுப்பினரைக் கொண்டிருப்பது தேசிய அரசாகாது என ஜே.வி.பி. தரப்பில் விசனம் வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment