தமது ஆடைக்கலாச்சாரத்தைப் பேண அனுமதி மறுக்கப்பட்டுள்ளதன் மூலம் சர்ச்சைக்குள்ளான திருகோணமலை ஷண்முகா இந்துக் கல்லூரியில் பணியாற்றிய முஸ்லிம் ஆசிரியைகளின் அடிப்படை உரிமை மீறப்பட்டுள்ளதாக மனித உரிமைகள் ஆணைக்குழு தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இன்றைய தினம் வெளியிடப்பட்ட குறித்த அறிக்கையின் பிரகாரம் குறித்த ஆசிரியர்கள் அபாயா அணிந்து பாடசாலைக்கு வர அனுமதிக்கப்பட வேண்டும் என பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
எனினும், ஏலவே குறித்த ஆசிரியைகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment