காலிமுகத்திடல் முனையில் கோல்பேஸ் ஹோட்டல் மற்றும் கோல்பேஸ் கோர்ட் சந்தியில் அமைந்துள்ள சுற்று வட்டத்தின் அளவைக் குறைக்க உடனடி நடவடிக்கை எடுத்துள்ளார் மேல் மாகாண ஆளுனர் அசாத் சாலி.
இது தொடர்பில் சோனகர்.கொம்முக்கு விளக்கமளித்த அவர், அப்பகுதியில் வாகன நெரிசலையும் போக்குவரத்து சிரமங்களையும் குறைக்கும் அடிப்படையில் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் இதனூடாக வாகனங்கள் சுற்றி வளைக்காமல் நேரடியாக பயணிக்க முடியும் எனவும் தெரிவித்தார்.
அத்துடன், நீண்ட காலமாக கிடப்பிலிருந்த வெள்ளவத்தை ஈஸ்வரி வீதி விஸ்தரிப்பு பணிகளும் ஆளுனரின் நேரடி தலையீட்டில் ஆரம்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
-AM
No comments:
Post a Comment