இலங்கையில் இறக்குமதி செய்யப்படும் பால் மா வகைகளில் பன்றிக் கொழுப்பு கலந்திருப்பதாக அண்மையில் பிரதியமைச்சர் புத்திக பத்திரன வெளியிட்ட தகவலை இலங்கை ஹலால் கவுன்சில் மற்றும் பால் மா வகைகளை இறக்குமதி செய்யும் பொன்டேரா நிறுவனங்கள் மறுத்துள்ளன.
வேறு வகை எண்ணைகளோ பன்றிக் கொழும்போ கலக்கப்படுவதில்லையெனவும் பக்கற்றில் குறிப்பிடப்பட்டுள்ள பொருட்கள் மாத்திரமே கலக்கப்படுவதாகவும் பொன்டேரா நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் ஹலால் கவுன்சில் எனும் பெயரில் இயங்கும் தனியார் நிறுவனமும் இத்தகவலை மறுத்துள்ளதுடன் அங்கர், நெஸ்லே, ரெட் கவ், லக்ஸ்பிரே உட்பட்ட பால் மா வகைகளில் பன்றிக் கொழுப்பு கலப்படம் இல்லையென உறுதி செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment