ரணில் விக்கிரமசிங்க நாடாளுமன்ற உறுப்பினராக பதவி வகிப்பதன் அடிப்படையைக் கேள்விக்குட்படுத்தித் தாக்கல் செய்யப்பட்ட வழக்கினை விசாரிக்க மறுத்து விலகிக் கொண்டுள்ளார் நீதிபதி தீபாலி விஜேசுந்தர.
அரசுடன் வர்த்தகம் செய்யும் நிறுவனம் ஒன்றின் பங்குதாரராக உள்ள ரணில் விக்கிரமசிங்க நாடாளுமன்ற உறுப்பினராக செயற்பட தகுதியற்றவர் எனவும் வழக்கு விசாரணை முடியும் வரை அவர் இடை நிறுத்தப்பட வேண்டும் எனவும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் கொழும்பு மாநகர சபை உறுப்பினர் சர்மிளா கோனவல என்பவராலேயே இவ்வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் வேறு நீதிபதிகளின் முன்னிலையில் வழக்கின் விசாரணை 12ம் திகதி இடம்பெறும் என எதிர்பார்க்கப்படும்.
No comments:
Post a Comment