மாகந்துரே மகேஷ் என அறியப்படும் பிரபல பாதாள உலக பேர்வழி தனது சகாக்கள் பலருடன் துபாயில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தகவல் வெளியிட்டுள்ளனர்.
மதுஷ், இம்ரான் உட்பட 25 பேர் துபாய் ஹோட்டல் ஒன்றில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாகவும் இதில் பிரபல சிங்கள பாடகர் அமல் பெரேராவும் உள்ளடக்கம் எனவும் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
வெளிநாட்டில் இருந்து கொண்டு மகேஷ் தனது கோஷ்டியை இயக்கி வந்ததுடன் நாட்டில் பல்வேறு குற்றச்செயல்களை வழி நடாத்தி வந்ததாக தெரிவித்து வந்த பொலிசார் உள்நாட்டில் மகேஷின் சகாக்கள் பலரை கைது செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment