கடந்த 71 வருடங்களாக நாட்டின் பொது மக்கள் சுதந்திரமான வாழ்க்கையை இழந்து தவிப்பது போன்றே ஆதிவாசிகளும் தவிப்பதாகவும் தமது சுதந்திரம் பறிபோய் விட்டதாகவும் தெரிவிக்கிறார் ஆதிவாசிகள் சமூகத்தின் தலைவர் வன்னிலத்தோ தெரிவித்துள்ளார்.
தனக்கும் 71 வயதாகிவிட்டதாகவும் சுதந்திர தினங்கள் கொண்டாடப்படுகின்ற போதிலும் மக்கள் சுதந்திரமாக வாழவில்லையெனவும் இன்று பதுளையில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் வைத்து வன்னிலத்தோ விளக்கமளித்திருந்தார்.
நாடு பொருளாதார ரீதியாக முன்னேறிவிட்டதாக தெரிவிக்கப்படுகின்ற போதிலும் தமது சமூகம் இன்னும் எந்த அபிவிருத்தியையும் காணவில்லையெனவும் அவர் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment