மிளகு 'மோசடி': ரிசாத் பதியுதீன் மறுப்பு! - sonakar.com

Post Top Ad

Saturday, 9 February 2019

மிளகு 'மோசடி': ரிசாத் பதியுதீன் மறுப்பு!


மக்கள் மீது தனக்குள்ள செல்வாக்கு, கீர்த்தி என்பவற்றை அபகீர்த்திக்கு உள்ளாக்கும் நோக்கில் ஆதாரமின்றி தன் மீது இட்டுக்கட்டிய செய்தி பரப்பிதற்காக தொழில்சார் தகவல் தொழில்நுட்ப அமைப்பின் செயலாளர் லசந்த விக்கிரம சிங்கவிடமிருந்து ரூபா நூறு மில்லியனை மான நஷ்ட ஈடாக வழங்குமாறு தனது சட்டத்தரணியூடாக அமைச்சர் ரிஷாத்பதியுதீன்  கோரியுள்ளதாக அவர் தரப்பிலிருந்து தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 



வியட்நாமிலிருந்து மிளகை இறக்குமதி செய்து, வேறு வகையில் பொதியிட்டு அவற்றை இந்தியா உட்பட வேறு நாடுகளுக்கு .ஏற்றுமதி செய்து உள்ளுர் உற்பத்தியாளர்களைப் பாதிக்கும் வகையில் அமைச்சரும் அவரது சகோதரரும் நடந்து கொள்வதாக லசந்தவிக்கிரமசிங்க வெளியிட்ட தகவலுக்கு எதிராகவே அமைச்சர் ரிஷாத்பதியுதீன் மான நஷ்டஈடு கோரியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

சட்டத்தரணி சந்தீப கமதிகே ஊடாக இக்கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

No comments:

Post a Comment