மாகந்துரே மதுஷுடன் டுபாயில் கைதாகியுள்ள கஞ்சிபான இம்ரான் என அறியப்படும் பாதாள உலக பேர்வழியின் சகா நௌபர் முஹமத் அலி என அறியப்படும் நபர் கொலன்னாவயில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
குறித்த நபரின் கைவசமிருந்து 10 கிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டதாகவும் பொலிசார் தெரிவிக்கின்றனர்.
அண்மையில் கஞ்சிபான இம்ரானின் துணைவியென அறியப்படும் குடு சூட்டி மீது துப்பாக்கிச் சூடு நடாத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment