பேராதனைப் பல்கலைக்கழக விஞ்ஞானப் பட்டதாரியும் முதுமாணியுமான பேராசிரியர் ஜௌபர், தனது கலாநிதி பட்டப்படிப்பை சீனா- சியாமன் பல்கலைக்கழகத்தில் நிறைவு செய்திருந்தார்.
மறைந்த தலைவர் மர்ஹூம் அஷ்ரப் அவர்களின் கனவுகள் நிஜமாகும் தருணங்களில் ஒன்றாக, தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் பேராசிரியர்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றனர். அந்த வரிசையில் தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் பிரயோக விஞ்ஞான பீடம், தனது முதலாவது பேராசிரியரை பிரசவித்துள்ளது.
அட்டாளைச்சேனையைச் சேர்ந்த கலாநிதி அபூபக்கர் ஜௌபர் அவர்கள் கணிதத்துறையின், புள்ளிவிபரவியல் பிரிவில் முதலாவது பேராசிரியர் என்ற பெருமையையும் அவர்பிறந்த அட்டாளைச்சேனை மண்ணின் முதலாவது பேராசிரியர் என்ற புகழையும் குறித்த பிரிவில் கிழக்கு மாகாணத்தில் முதலாவது பேராசிரியர் என்ற பெயரையும் தனதாக்கிக்கொண்ட இவர், துறைசார்ந்த 53 ஆய்வுக்கட்டுரைகளையும் 9 புத்தகங்களையும் எழுதியுள்ளார். அத்துடன் இலங்கை, இந்தியா, வியட்னாம் ஆகிய நாடுகளில் தொழில்சார் டிப்ளோமாக் கற்கை நெறிகளையும் பூர்த்தி செய்துள்ளார்.
குறித்த நியமனம், அவரது கல்வித்தரத்தின் அடிப்படையில் பல்கலைக்கழகக் கவுன்ஸிலின் அங்கீகாரத்துடன் உபவேந்தர் பேராசிரியர் எம்.எம்.எம்.நாஜிம் அவர்களால் கடந்த 2016 செப்டம்பர் மாதம் முதல் செயற்படத்தக்கதாக வழங்கப்பட்டுள்ளது..
பேராதனை பல்கலைக்கழகம், தென்கிழக்குப் பல்கலைக்கழகம் என்பனவற்றில் மொத்தம் 24 வருட சேவையை நிறைவு செய்துள்ள பேராசிரியர் ஜௌபர் அதிகமான நாடுகளில் ஆய்வுக் கட்டுரைகள் மற்றும் புத்தகங்களைச் சமர்ப்பித்து தனது திறமையை வெளிக்காட்டியுள்ளார்.
அட்டாளைச்சேனை அறபா வித்தியாலயம், அட்டாளைச்சேனை மத்திய கல்லூரி (தேசிய பாடசாலை) மற்றும் கம்பளை ஸாஹிறா கல்லூரி (தேசிய பாடசாலை) என்பனவற்றின் பழைய மாணவரான பேராசிரியர் ஜௌபர், அட்டாளைச்சேனை ஆதம்பாவா அபூபக்கர் - ஆதம்பாவா அவ்வா உம்மா தம்பதியரின் புதல்வராவார்.
-எம்.வை.அமீர்
No comments:
Post a Comment