கிரலகல தூபி மீது ஏறிப் படம் பிடித்து, அதனை சமூக வலைத்தளத்தில் பதிவேற்றியதன் பின்னணியில் சர்ச்சைக்குள்ளாகிக் கைதாகியிருந்த தென் கிழக்குப் பல்கலை மாணவர்கள் எண்மரும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த மாணவர்கள் அறியாமல் இத்தவறைச் செய்து விட்டதாகவும் மன்னித்து விடும்படியும் சட்டத்தரணிகள் முன் வைத்த வாதத்தை நீதிமன்றம் ஏற்றுக்கொண்டதையடுத்து தலா 52000 ரூபா அபராதத்துடன் மாணவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
ஒரு வருடத்துக்கு முன் பதிவேற்றப்பட்ட படங்களை வைத்தே மாணவர்களைக் கைது செய்திருந்தமையும் அரசியல்வாதிகள் தாம் விடுவித்துத் தரப்போவதாக பிரச்சாரம் செய்து வந்திருந்தமையும் இன்றைய வழக்கில் சட்டத்தரணிகள் ருஷ்தி ஹபீப், சிராஸ் நூர்தீன் உட்பட்ட குழுவினர் ஆஜராகியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment