டுபாயில் கைதான பாதாள உலக பேர்வழி மதுஷின் சகாவான ஜங்கா என அறியப்படும் அனுஷ்க கவிசாலின் வீட்டில் பொலிசார் மேற்கொண்ட தேடலில் ஆயுதங்கள், இராணுவ சீருடைகள் மீட்கப்பட்டுள்ளன.
கொலை மற்றும் கொள்ளைச் சம்பவங்களின் பின்னணியில் தேடப்படும் ஜங்கா, டுபாயில் வைத்து மதுஷுடன் கைதாகியுள்ளதாகவும் குறித்த நபரது தலல்ல இல்லத்தில் இடம்பெற்ற சோதனையின் போதே துப்பாக்கிகள், ரவைகள் மற்றும் இராணுவ சீருடைகளும் மீட்கப்பட்டுள்ளதாகவும் பொலிசார் தெரிவிக்கின்றனர்.
இதில் T56 ரக துப்பாக்கிகளும் உள்ளடக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment