கடந்த தேர்தலில் 42 வீத மொத்த வாக்குகளை மாத்திரமே பெற்ற ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன, கூட்டணியமைக்காமல் எதிர்வரும் தேர்தலில் வெற்றி பெற முடியாது என தெரிவிக்கிறார் உதய கம்மன்பில.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி பெரமுனவுடன் இணைவது அவசியம் என வலியுறுத்தியுள்ள அவர், பெரமுன தனித்து வெல்லலாம் என தெரிவிப்பது கட்சியின் தோல்வியை நாடுபவர்களின் கூற்று எனவும் தெரிவிக்கிறார்.
எனினும், பெரமுன தனித்து வெல்வதற்கான சூழ்நிலையிலேயே இருப்பதாக பசில் ராஜபக்ச அண்மையில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment