இளம் மாதர் முஸ்லிம் அமைப்பினர் மேல் மாகாண ஆளுநர் அஸாத் ஸாலியை ஆளுநர் அலுவலகத்தில் இன்று (12) சந்தித்துள்ளனர்.
அமைப்பின் தலைவி தேசமான்ய பவாஸா தாஹா மற்றும் அமைப்பின் ஆலோசகரும், முன்னாள் வை.எம்.எம்.ஏயின் தலைவருமான காலித் பாறுக் உள்ளிட்ட அமைப்பின் உயர் பீட அங்கத்தவர்கள் சந்தித்து அமைப்பின் தற்போதைய செயற்றிட்டங்கள் மற்றும் எதிர்கால வேலைத் திட்டங்கள் தொடர்பாக விளக்கமளித்து கலந்துரையாடியுள்ளனர். இதன்போது ஆளுநர் அமைப்பினரின் சமுக சேவைத் திட்டங்களைப் பாராட்டியதுடன் எதிர் காலத்திலும் நல்ல பல சேவைகளை செய்ய வேண்டும் எனவும் தெரிவித்த அவர் தன்னால் முடிந்த உதவிகளை நல்குவதாகவும் தெரிவித்துள்ளார்.
இவ்வமைப்பினர் அகில இலங்கை ரீதியில் மூவின மக்களின் விதவைப் பெண்களின் வாழ்வாதாரம், அநாதைச் சிறுவர்கள், வறிய மாணவர்களுக்கு கல்விக்கான கற்றல் உபகரணங்களையும், உதவிகளை வழங்கள், நோயாளிகள், வயோதிபர்களுக்கு சக்கர நாற்காலிளை வழங்கி உதவுதல், வறிய குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொதிகளை வழங்கள், பெண்களின் சுய தொழிலுக்காக தையல் இயந்திரங்கள் வழங்கள், சமயல் உபகரணங்கள் வழங்கள் உள்ளிட்ட பல இனங் காணப்பட்ட விடயங்களுக்கு முன்னுரிமை கொடுத்து உதவி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
-ஏ.எஸ்.எம்.ஜாவித்
-ஏ.எஸ்.எம்.ஜாவித்
1 comment:
Hope our governor would not repeat his dirty tricks again on our sisters..
Post a Comment