தன்னைக் கொலை செய்வதற்குத் திட்டம் தீட்டப்பட்டுள்ள விவகாரத்தில் குற்றப்புலனாய்வுப் பிரிவினர் தன்னிடமும் வாக்குமூலம் பெற்றுள்ளதாக தெரிவிக்கிறார் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன.
சட்ட-ஒழுங்கு தன் வசம் வந்த பின்னர் கொலைத் திட்ட விசாரணை துரிதமாக இடம்பெறுவதாக தெரிவிக்கின்ற அவர், நான்கு நாட்களுக்கு முன்னர் தனது வாக்குமூலமும் வழங்கப்பட்டுள்ளதுடன் விசாரணை முடிவுக்கட்டத்தை எட்டியுள்ளதாக தெரிவித்துள்ளார்.
குறித்த தகவல் வெளியானதன் பின்னணியில் உருவான முறுகலே ஒக்டோபர் அரசியல் பிரளயத்துக்குக் காரணம் என நம்பப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment