பொரளை பொலிஸ் நிலையத்தின் போக்குவரத்துப் பிரிவுப் பொறுப்பதிகாரியை டிபென்டரால் மோதிவிட்டுச் சென்ற விவகாரத்தில் மஹிந்த ராஜபக்ச அணியின் முக்கியஸ்தர் மஹிந்தானந்த அளுத்கமகேவின் புதல்வர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
பிரபல வர்த்தகர் தம்மிகவின் புதல்வரும் குறித்த விவகாரத்தில் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்ற அதேவேளை டிபென்டர் மற்றும் ப்ராடோ வாகனங்களில் இச்சம்பவத்தோடு சம்பந்தப்பட்டவர்கள் பயணித்ததாக தெரிவிக்கப்படுகிறது.
வாகனத்தால் மோதுண்ட பொலிஸ் அதிகாரி தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment