சவுதி அரேபியாவுக்கு அணு சக்தி தொழிநுட்பத்தை வழங்க டிரம்ப் நிர்வாகம் தீர்மானித்துள்ள நிலையில் அதனை கடுமையாக விமர்சித்துள்ளது ஈரான்.
மத்திய கிழக்கில் சமாதான சூழ்நிலையை உருவாக்குவது அமெரிக்காவின் நோக்கமில்லையென்பது மீண்டும் தெளிவாகியுள்ளதாகவும் சவுதி அரேபிபாயுக்கு அணு சக்தி தொழிநுட்பம் வழங்கப்படுவது இதனை நிரூபிப்பதாகவும் ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜாவத் சரிப் தெரிவித்துள்ளார்.
தனது நிறைவேற்று அதிகாரத்தைப் பயன்படுத்தி காங்கிரசின் அனுமதியில்லாமலே சவுதி அரேபியாவுக்கு அணு சக்தி தொழிநுட்பத்தை விற்பனை செய்வதற்கு டொனால்ட் ட்ரம்ப் நடவடிக்கை எடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment