மாகந்துரே மதுஷ் கைதினால் சில அரசியல்வாதிகள் குலைநடுங்கிப் போயுள்ளதாக தெரிவிக்கிறார் மத்திய மாகாண ஆளுனர் மைத்ரி குணரத்ன.
அரசியல்வாதிகளின் தொடர்புகளும் உதவியும் இன்றி மதுஷ் போன்றவர்கள் வளர்ந்திருக்க முடியாது என தெரிவிக்கின்ற அவர், ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தற்போது எடுத்திருக்கும் கடுமையான நிலைப்பாட்டை முன்னரே எடுத்திருந்தால் போதைப் பொருள் ஒழிப்பில் இந்நேரம் பாரிய முன்னேற்றம் கண்டிருக்கலாம் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
மதுஷை உருவாக்கியதும் வெளிநாட்டுக்கு அனுப்பியதும் கூட முன்னணி அரசியல்வாதிகளே என கருத்து வெளியிடப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment