ஜனாதிபதி தேர்தலில் கோத்தபாய ராஜபக்ச போட்டியிடுவார் எனும் எதிர்பார்ப்பு நிலவுகின்ற நிலையில் தான் அதிகாரத்துக்கு வந்தால் இராணுவ ஆட்சி நிலவுமா என தன்னிடம் கேள்வி கேட்கப்படுவதாகவும் செல்லும் இடமெல்லாம் இக்கேள்வி முன்வைக்கப்படுவதாகவும் தெரிவிக்கிறார் கோத்தபாய.
தன்னைப் பொறுத்தவரை மக்கள் 'தற்போது' அறிந்து வைத்துள்ள கோத்தபாயவையே விரும்புவதாகவும் தனது குண நலன்களை மாற்றிக் கொள்ள வேண்டிய அவசியம் எதுவுமில்லையென்பதே அதற்கான பதில் எனவும் அவர் மேலும் விளக்கமளித்துள்ளார்.
தான் கண்டிப்பான இராணுவ ஒழுங்கைக் கடைப்பிடிப்பவன் என கோத்தபாய அடிக்கடி தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment