திருமதி சந்தியா எக்னலிகொடவை நீதிமன்றுக்குள் புகுந்து அச்சுறுத்திய விவகாரத்தின் பின்னணியில் ஞானசாரவுக்கு வழங்கப்பட்டிருந்த ஆறு மாத கடூழிய சிறைத்தண்டனை ஐந்து வருடங்களுக்கு இடை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
2016ம் ஆண்டு ஜனவரி மாதம் 25ம் திகதி ஹோமாகம நீதிமன்றுக்குள் புகுந்த பயங்கரவாதி ஞானசார அங்கு சாட்சியாக இருந்த சந்தியாவை அச்சுறுத்தியதுடன் நீதிமன்ற அவமதிப்பிலும் ஈடுபட்டிருந்தார்.
நீதிமன்ற அவமதிப்பின் பின்னணியில் தற்சமயம் ஞானசார சிறைச்சாலை வைத்தியசாலையில் வைத்து பராமரிக்கப்படுகின்ற அதேவேளை முன்னைய தண்டனை ஐந்து வருடங்களுக்கு இடைநிறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment