ஜனாதிபதி செயலகத்தில் பணிபுரியும் சாரதியொருவரும் மேலும் ஒரு நபரும் ஹெரோயின் போதைப் பொருள் கைவசம் வைத்திருந்த நிலையில் போகஸ்வேவ, அரலகன்வில பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தகவல் வெளியிட்டுள்ளனர்.
இருவரும் கொழும்பில் பணியாற்றுபவர்கள் என தெரிவிக்கப்படுகின்ற அதேவேளை பாவனைக்கான போதைப் பொருள் கை வசம் வைத்திருந்ததாக நம்பப்படுகிறது.
போதைப் பொருள் ஒழிப்புக்கான கடும் நடவடிக்கைகளை மேற்கொள்வதாக ஜனாதிபதி தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment