வெளிநாட்டில் 'தூக்கு கயிறு' தேடும் இலங்கை - sonakar.com

Post Top Ad

Friday, 15 February 2019

வெளிநாட்டில் 'தூக்கு கயிறு' தேடும் இலங்கை


இலங்கையில் போதைப் பொருள் வர்த்தகத்தில் ஈடுபடுவோரை தூக்கிலிட்டாக வேண்டும் என ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்து வரும் நிலையில், அண்மையில் வெலிகடை தூக்கு மேடை பரீட்சிக்கப்பட்டு அங்குள்ள தூக்குக் கயிறு பாவனைக்கு உகந்ததில்லையென அறிவிக்கப்பட்டிருந்தது.



2015ம் ஆண்டு பாகிஸ்தான் நன்கொடையாக வழங்கியிருந்த குறித்த கயிறு பாவிக்கப்படாத நிலையிலேயே தற்போது பாவனைக்கு உகந்ததாக காணப்பட்டுள்ளது. இந்நிலையில் வெளிநாட்டில் இருந்து புதிய தூக்குக் கயிறு தேடும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, இலங்கையில் மரண தண்டனை நிறைவேற்ற எடுக்கும் முயற்சி தொடர்பில் ஐரோப்பிய யூனியள் அதிருப்தி வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment