தற்போது நிலவும் சூழ்நிலையில் ஜனாதிபதி தேர்தலே முதலில் இடம்பெறும் என தெரிவிக்கிறார் குமார வெல்கம.
மாகாண சபை தேர்தலை முற்படுத்தினால் அரசாங்கம் படுதோல்வியைத் தழுவும் என்பது அனைவரும் அறிந்த விடயம் என்பதால் அதனை எதிர்பார்ப்பது கேலிக்கூத்து என தெரிவிக்கின்ற அவர், முதலில் ஜனாதிபதி தேர்தலே இடம்பெறும் என விளக்கமளித்துள்ளார்.
அத்துடன் மூன்றிலிரண்டு பெரும்பான்மை இல்லாது தற்போது மாற்றப்பட்டிருக்கும் தேர்தல் முறைமையை மீண்டும் மாற்றவும் முடியாது என்பதே யதார்த்தம் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளதுடன் மைத்ரிபால சிறிசேனவால் தேர்தலில் வெல்ல முடியாது எனவும் அடித்துக் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment