மீண்டும் தாஜுதீன் விவகாரம்: சூத்திரதாரியை தேடுகிறோம்: பி.ச.மா.அதிபர் - sonakar.com

Post Top Ad

Thursday 28 February 2019

மீண்டும் தாஜுதீன் விவகாரம்: சூத்திரதாரியை தேடுகிறோம்: பி.ச.மா.அதிபர்



வசிம் தாஜுதீன் கொலை விசாரணை தொடர்ந்தும் இடம்பெற்று வருவதாகவும் சந்தேக நபர்கள் மூவரையும் இயக்கிய பிரதான சூத்திரதாரி யார் என்பதை அறியும் கோணத்தில் விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் தகவல் வெளியிட்டுள்ளார் பிரதி சட்டமா அதிபர் டிலன் ரத்னாயக்க.

தேர்தல் காலத்தின் பேசு பொருளாக, கடந்த ஜனாதிபதி தேர்தலில் பொது வேட்பாளரின் வெற்றிக்கு இவ்விவகாரம் உதவியிருந்த நிலையில், விசாரணைகள் 2016க்குள் நிறைவுறும் என முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தது. 



தற்போது இவ்வருடம் மீண்டும் தேர்தல்கள் எதிர்பார்க்கப்படும் நிலையில் வசீம் தாஜுதீன் விவகாரம் பற்றிப் பேசப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment