யாழ் ஹர்த்தால்: முஸ்லிம்கள் நிராகரிப்பு - sonakar.com

Post Top Ad

Monday, 25 February 2019

யாழ் ஹர்த்தால்: முஸ்லிம்கள் நிராகரிப்பு


யாழ் மாவட்டம் காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதி வேண்டி மேற்கொள்ளப்படும் பூரண ஹர்த்தாலை நிராகரித்து யாழ் முஸ்லீம் மக்கள் வழமை போன்று தமது நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

இன்றைய தினம்(25)  யாழ் முஸ்லீம் மக்கள் வாழும் சொனகத்தெரு ஐந்து சந்தி பொம்மைவெளி அராலி உள்ளிட்ட பகுதிகளில் தமது வியாபார நடவடிக்கையினை வழமை போன்று மேற்கொண்டனர்.



வடக்கு  மாகாணம் முழுவதும் பூரண ஹர்த்தால் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் பல இடங்களில்  அனைத்து விதமான சேவைகளும் முடங்கியுள்ளன. எனினும்  யாழ் மாவட்டத்தில்   காலை முதல் ஹர்த்தால் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.இதனால்   அரச சேவைகள் போக்குவரத்து பாடசாலை என பல்வேறு பகுதிகளும் முடக்கப்பட்டுள்ளது.அனைத்து வரத்தக நிலையங்களும் பூட்டப்பட்டுள்ளதுடன் சேவை சந்தையில் கறுப்பு கொடி கட்டப்பட்டு ஹர்த்தால் மேற்கொள்ளப்பட்டுள்ளன.


இதே வேளை யாழ் முஸ்லிம்  மக்கள் இப்போராட்டத்திற்கு ஆதரவு நல்குவர் என  யாழ் - கிளிநொச்சியில் உள்ள சில சிவில் அமைப்புகள் கோரிக்கை விடுத்திருந்த போதிலும்  அவை தோல்வியில் முடிவடைந்துள்ளன.

சில தமிழ் உணவகங்களும் திறந்து காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

-பாறுக் ஷிஹான்

No comments:

Post a Comment