இறக்குமதி வரி மோசடியின் பின்னணியில் கைது செய்யப்பட்டு25ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க ப்பட்டிருந்த சந்தேக நபர்களை தொடர்ந்தும் தடுத்து வைக்க அனுமதியளித்துள்ளது நீதிமன்றம்.
இவ்விவகாரத்தில் தொடர்புபட்ட சுங்க அதிகாரிகளுக்கு கட்டாய விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
பங்களதேஷிலிருந்து ஆடைத்துணிகள் இறக்குமதி செய்வதாகக் கூறி, புகையிலை இறக்குமதி செய்ததுடன் இதனால் அரசுக்கு 40 மில்லியன் ரூபா இழப்பை ஏற்படுத்தியிருப்பதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்டுள்ளவர்கள் மிளகு மற்றும் பாக்கு இறக்குமதி செய்து ஏற்றுமதி செய்வதிலும் முறைகேடுகளை செய்திருப்பதாகவும் வெளிநாடுகளிலிருந்து இவ்வாறு பொருட்களை இறக்குமதி செய்து அவற்றை வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் வர்த்தகம் செய்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment