எதிர்வரும் வாரத்துக்குள் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஒன்பது உறுப்பினர்கள் உள்ளடங்கலாக தேசிய அரசு நிறுவப்படும் என தெரிவிக்கிறார் லக்ஷ்மன் கிரியல்ல.
ஸ்ரீலசுக உறுப்பினர்களுடனான பேச்சுவார்த்தைகள் தொடர்ந்தும் நடைபெற்று வருகின்ற அதேவேளை, இதனை விரைவுபடுத்த முடிவெடுத்திருப்பதாகவும் எவ்வாறாயினும் எதிர்வரும் வாரம் அறிவிப்பை வெளியிடும் எதிர்பார்ப்பில் இருப்பதாகவும் கிரியல்ல மேலும் விளக்கமளித்துள்ளார்.
இதேவேளை, ஐக்கிய தேசிய முன்னணி அரசுக்கு ஆதரவளிக்கும் ஸ்ரீலசுக உறுப்பினர்களுக்கு அமைச்சுப் பதவிகளைத் தரப் போவதில்லையென ஜனாதிபதி உறுதியாகத் தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment