இலங்கையில் இறக்குமதி செய்து விற்பனை செய்யப்படும் பால் மா வகைகள் ஆரோக்கியமானவை இல்லையென தெரிவிக்கிறார் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன.
இறக்குமதி செய்யப்படும் பால்மாக்களில் மிருகக் கொழுப்பு உள்ளடக்கப்பட்டிருப்பதாக அண்மையில் பிரிதியமைச்சர் புத்திக பத்திரன தெரிவித்திருந்த நிலையில் ஜனாதிபதியும் இது பற்றி பேசியிருப்பதோடு உலகில் 15 நாடுகளே இறக்குமதி செய்யப்படும் பால் மாக்களை உபயோகிப்பதாகவும் இலங்கையும் அதில் ஒன்றெனவும் தெரிவித்துள்ளார்.
இதற்குப் பகரமாக திரவப் பால் உற்பத்தியை ஊக்குவிக்க வேண்டும் எனவும் ஜனாதிபதி தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment