பிரபல பாதாள உலக பேர்வழி மாகந்துரே மதுஷோடு டுபாயில் வைத்து கைதான பாடகர் அமல் பெரேரா மற்றும் நடிகர் ரயன் வீடுகளில் விசேட அதிரடிப்படையினர் இன்று மாலை சோதனை நடாத்தியுள்ளனர்.
இதன் போது அமல் பெரேராவின் வீட்டிலிருந்து வெற்று ஹெரோயின் பையொன்று கண்டெடுக்கப்பட்டுள்ளதுடன் ரயன் வீட்டில் மறைவான பகுதி கொண்ட பயணப்பொதியொன்றும் டிஜிட்டல் தராசொன்றும் கண்டெடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மதுஷோடு கைதானவர்களில் குறித்த நபர்களும் உள்ளடக்கம் என்பதோடு அவர்கள் கலை நிகழ்ச்சியொன்றுக்காக அங்கு சென்றதாக குடும்பத்தார் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment