சவுதி அரேபியாவின் முதலாவது பெண் தூதர் அமெரிக்காவுக்கான சவுதி தூதராகப் பொறுப்பேற்கவுள்ளார்.
இளவரசரி ரீமா பிந்த் பந்தர் அல் சவுதே இவ்வாறு சவுதி அரேபியாவின் முதலாவது பெண் தூதராக நியமனம் பெற்றுள்ளார். இதேவேளை இவரது தந்தை பந்தர் பின் சுல்தான் அல் சவுத் 2005 வரை சவுதியின் அமெரிக்க தூதராக பணியாற்றியிருந்தமையும் ரீமாவும் வொஷிங்டனில் இதன் போது வாழ்ந்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
தற்போதைய தூதர் முஹம்மத் பின் சல்மானின் இளைய சகோதரர் கலித் பின் சல்மான் சவுதியின் பிரதி பாதுகாப்பு அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளதையடுத்து ரீமா இப்பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
No comments:
Post a Comment