கிரலகல விவகாரத்தைத் தொடர்ந்து மிஹிந்தலையில் அமைந்துள்ள பௌத்த புராதன முக்கியத்துவம் வாய்ந்த தூபியொன்றில் ஏறிப் படம் பிடித்த குற்றச்சாட்டில் 18 மற்றும் 20 வயதுடைய இரு முஸ்லிம் இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தொல்பொருட் திணைக்களம் தகவல் வெளியிட்டுள்ளது.
நிட்டம்புவ அரபுக் கலாசாலையொன்றில் கல்வி பயில்வதாக நம்பப்படும் இரு இளைஞர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதுடன் மூதுரை வசிப்பிடமாகக் கொண்டவர்கள் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
கைது செய்யப்பட்டுள்ள மாணவர்கள் நாளை நீதிமன்றில் ஒப்படைக்கப்படவுள்ள அதேவேளை மிஹிந்தலை பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கின்றனர். கிரலகல விவகாரத்தில் குற்றத்தை ஒப்புக்கொண்ட தென்கிழக்குப் பல்கலை மாணவர்கள் அபராதம் செலுத்தி அண்மையில் விடுதலை பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment