மஹிந்த ராஜபக்சவின் பினாமி கட்சியான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் கோட்டாபே ராஜபக்ச விரைவில் உத்தியோகபூர்வமாக இணைந்து கொள்ளவுள்ளதாக எதிர்பார்க்கப்படுகின்ற நிலையில் அவருக்கும் அலுவலகம் ஒன்றை வழங்கும் நிமித்தம் புதிய கட்சிப் பணிமனைக் கட்டிடம் ஒன்றை தேடி வருவதாக பெரமுன தகவல்கள் தெரிவிக்கின்றன.
தற்போது, பத்தரமுல்ல நெலும் மாவத்தையில் அமைந்துள்ள கட்சி அலுவலகத்தில் இடப்பற்றாக்குறை நிலவுவதாகவும் மாற்றீடாக புதிய கட்டிடம் ஒன்றைப் பெற முயற்சிப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக கோத்தாவை நிறுத்தப் போவதாக பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்படுகின்ற அதேவேளை, அவர் அமெரிக்க பிரஜாவுரிமையைக் கைவிடப் போவதில்லையெனவும் இது முதலீட்டாளர்களைக் கவரும் யுக்தியெனவும் ஐக்கிய தேசியக் கட்சியினர் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment