டுபாயில் கைதான பாதாள உலக பேர்வழி மாகந்துரே மதுஷ் மற்றும் சகாக்களை இலங்கைக்கு நாடு கடத்துமாறு ஐக்கிய அரபு அமீரகத்திடம் உத்தியோகபூர்வ கோரிக்கை விடுக்கப்படவுள்ளதாக ஸ்ரீலங்கா பொலிஸ் தகவல் வெளியிட்டுள்ளது.
தனது புதல்வியின் பிறந்த தினத்தையொட்டி மதுஷ் ஏற்பாட்டில் இடம்பெற்ற கேளிக்கையின் போதே இக்கைது இடம்பெற்றுள்ள அதேவேளை அதில் பங்கேற்ற இரு பொலிஸ் உளவாளிகளே டுபாய் பொலிசாருக்கு தகவல் வழங்கியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
முன்னாள் ரஷ்யாவுக்கான தூதருக்கு எதிராக சர்வதேச பிடியாணை இருந்த போதிலும் டுபாயில் கைது செய்யப்பட்டிருந்த வேளையில் உதயங்க வீரதுங்கவை இலங்கைக்கு கொண்டுவர மெற்கொள்ளப்பட்ட முயற்சிகள் சாத்தியமற்றுப் போயிருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment