மிஹிந்தலை ரஜமகா விகாரைக்குட்பட்ட பிரதேசத்தில் உள்ள புராதன தூபியொன்றில் ஏறி நின்று படம் பிடித்ததன் பின்னணியில் நேற்றைய தினம் கைது செய்யப்பட்ட இரு முஸ்லிம் இளைஞர்களுக்கு இம்மாதம் 21ம் திகதி விளக்கமறியல் வழங்கப்பட்டுள்ளது.
அங்கிருக்கும் அறிவித்தல்களையும் மீறியே குறித்த இளைஞர்கள் இச்செயலைச் செய்திருப்பதாக தெரிவிக்கப்படுகின்ற அதேவேளை நிட்டம்புவ, திஹாரிய பகுதியில் இயங்கும் அரபுக் கல்லூரியொன்றின் மாணவர்களே இவ்வாறு கைதாகியுள்ளனர்.
ஏலவே, தென்கிழக்குப் பல்கலை மாணவர்கள் எண்மர் கைதாகி, குற்றத்தை ஒப்புக்கொண்டு அபராதத்துடன் விடுதலையாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment