கடந்த நவம்பரில் நாடாளுமன்றில் மஹிந்த அணியினர் நடாத்தியிருந்த கலகத்தினை பொலிசார் விசாரிக்க அனுமதிக்கக் கூடாது என தெரிவிக்கிறார் மஹிந்த ராஜபக்ச.
நாடாளுமன்றைப் பொறுத்தவரையில் சபாநாயகருக்கு முழு அதிகாரமும் இருப்பதாக தெரிவிக்கும் அவர், பொலிசார் இவ்விடயத்தில் மூன்றாந்தரப்பினர் எனவும் அவர்கள் தலையிடக் கூடாது எனவும் தெரிவித்துள்ளார்.
எனினும், பொலிஸ் ஊழியர் தாக்கப்பட்டது தொடர்பிலேயே பொலிசார் விசாரணை நடாத்துவதாக சபாநாயகர் விளக்கமளித்துள்ளார்.
No comments:
Post a Comment