மாளிகாவத்தை பிரதேசத்தில் முன்னர் பாதாள உலக நடவடிக்கைகளில் ஈடுபட்டு, உயிரிழந்த பாஜி என அறியப்படும் நபரின் இரண்டாவது மனைவியென நம்பப்படும் குடு சூட்டியென அறியப்படும் ஆஷா பாஜி (39) மீது இன்று மாலை துப்பாக்கிச் சூடு நடாத்தப்பட்டுள்ளது.
இதன் பின்னணியில் குறித்த பெண் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள அதேவேளை கிரான்ட்பாஸ் பகுதியில் இப்பெண் போதைப் பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.
கிரான்ட்பாஸ், மெல்வத்த பகுதியில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment