மாகந்துரே மதுஷின் துப்பாக்கி சுடும் நபராகப் பணியாற்றிய இராணுவ கோப்ரலின் வீட்டில் இன்றைய தினம் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது இராணுவ சீருடைகள் - T56 ரக துப்பாக்கி தோட்டாக்கள் மற்றும் கைவிலங்கும் மீட்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
சபுகஸ்கந்த இராணுவ முகாமைச் சேர்ந்த குறித்த நபர் தலைமறைவாகியுள்ள அதேவேளை, கடந்த வருடம் இடம்பெற்ற இரத்தினக் கல் கடத்தலில் உபயோகிக்கப்பட்டதாகக் கருதப்படும் கைவிலங்கும் கைப்பற்றப்பட்டுள்ளது.
இந்நிலையில், குறித்த நபரின் தந்தையார் பொலிசாரினால் கைது செய்யப்பட்டு விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment