வாழைத் தோட்டம்: முனீர் மஅல் மத்ரஸா மாணவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு - sonakar.com

Post Top Ad

Sunday, 10 February 2019

வாழைத் தோட்டம்: முனீர் மஅல் மத்ரஸா மாணவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு


கொழும்பு-12, வாழைத் தோட்டம் அல்-மஸ்ஜிதுல் முனீர் மஅல் மத்ரஸாவில் புனித அல்-குர்ஆனை முழுமையாக ஓதி வெளியாகும் மாணவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் வைபவம் நேற்று முன்தினம் இரவு மத்ரஸாவில் அதன் தலைவர் ஜஹாங்கிர் அலி தலைமையில் இடம் பெற்றது.



இதன்போது மத்ரஸாவின் அதிபர் மௌலவி எம்.எம்.எம்.ரயிசுதீன் (தீனி), உப அதிபர் மௌலவி எம்.ஏ.எம்.சிஹாப்தீன் (தீனி), மௌலவி எம்.ஐ.எம். முஸம்மில் (பஹ்ஜி) மற்றும் மௌலவி ஏ.டயிள்யு.எம்.பாக்கிர்(பாரி) ஆகியோரால் புனித அல்-குர்ஆனை சிறப்பாக கற்றுக் கொண்ட 19 மாணவ, மாணவிகள் நினைவுச் சின்னம், சான்றிதழ்கள் வழங்கப்பட்டு அதிதிகளால் கௌரவிக்கப்பட்டனர்.


இந்நிகழ்விற்கு பிரதம அதிதியாக கொழும்பு மாநகர சபையின் பிரதி மேயரும், மத்ரஸாவின் காப்பாளர்களில் ஒருவருமான எம்.ரி.எம்.இக்பால், பள்ளிவாசலின் முன்னாள் மற்றும் தற்போதைய நிருவாகிகள், காப்பாளர்கள் உள்ளிட்ட பலர் கலர் கலந்து சிறப்பித்தனர்.

இந்நிகழ்வில் மாணவர்களின் இஸ்லாமிய கலை நிகழ்வுகளும், ஜனாஸா தொடர்பான விளக்க நாடகமும் மேடையேற்றப்பட்டதுடன் அணைவருக்குமாக வேண்டி மத்ரஸாவின் அதிபர் மௌலவி ரயுசுதீனினால் விஷேட துஆப் பிரார்த்தனையும் மேற்கொள்ளப்பட்டது.

-ஏ.எஸ்.எம்.ஜாவித்

No comments:

Post a Comment