கொலைச் சம்பவம் ஒன்றின் பின்னணியில் தேடப்பட்டு வந்த சுது ஹக்குரு சுமித் எனும் நபர் தனம்வில பகுதியில் இன்று மதியம் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
இரு மோட்டார் சைக்கிள்களில் வந்த நபர்கள் துப்பாக்கிச் சூடு நடாத்திய நிலையில் 42 வயதான வசந்த எனும் இயற்பெயர் கொண்ட சுது ஹக்குரு சுமித் உயிரிழந்துள்ளதுடன் 22 வயது நபர் ஒருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள், கொலைகள் தொடர்ந்து கொண்டிருக்கும் அதேவேளை ஆங்காங்கு கைதுகளும் இடம்பெற்று வருகின்ற போதிலும் பாதாள உலக நடவடிக்கைகள் பரவலாக இடம்பெற்றுக்கொண்டிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment