கொழும்பிலிருந்து குப்பைகளைக் கொண்டு வந்து புத்தளம், அறுவக்காடு பகுதியில் கொட்டுவதற்கு அரசாங்கம் மேற்கொண்டுள்ள தீர்மானத்தை புத்தளம் பிரதேசத்தில் வாழும் மக்கள் எதிர்த்து வருகின்றனர்.
இப்பின்னணியில் மூன்று நாட்கள் ஏற்பாடு செய்யப்பட்ட தொடர் போராட்டத்தின் இரண்டாவது நாளான இன்றும் பெருந்திரளான மக்கள் கலந்து கொண்டிருந்தனர்.
இன்றைய தினம் முஸ்லிம்கள் நோன்பு நோற்று - துஆ பிரார்த்தனையிலும் ஈடுபட்டிருந்ததோடு கொழும்பு பேஸ் திடலில் நோன்பு திறக்கும் நிகழ்வும் சர்வமத தலைவர்களின் சிறப்புரைகளும் இடம்பெற்றிருந்தது. குறிப்பிடத்தக்கது.
-கரீம் எ.மிஸ்காத்
No comments:
Post a Comment