பொலிஸ் ஊழியர் ஒருவரை தாக்கியதன் பின்னணியில் ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறியை கைது செய்வதற்கு சபாநாயகரின் அனுமதியைப் பெற்றுள்ளது ஸ்ரீலங்கா பொலிஸ்.
இப்பின்னணியில் சமிந்தவை தற்போது தேடி வருவதாகவும் அவரது இல்லத்தில் அவர் இல்லையெனவும் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
பண்டாரவளை பொலிஸ் நிலைய போதைப்பொருள் ஒழிப்பு பிரிவில் கடமையாற்றும் ஒருவர் மீது சமிந்த மேற்கொண்ட தாக்குதலில் அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் சமிந்தவின் சாரதி நேற்றைய தினம் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், சமிந்தவின் பாதுகாப்பு பிரிவில் உள்ள ஒருவரையும் கைது செய்யவுள்ளதோடு தற்போது தேடல் நடவடிக்கை இடம்பெறுவதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment