போதைப் பொருள் வர்த்தகத்தில் ஈடுபடுவோரை தூக்கிலிட்டே ஆக வேண்டும் என ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்து வரும் நிலையில் வெலிகடை சிறைச்சாலையில் உள்ள தூக்கு மேடையைத் தயார் செய்யும் பணிகள் ஆரம்பமாகியுள்ளதாக அறியமுடிகிறது.
அங்கிருக்கும் நிலைகள் மற்றும் வசதிகள் குறித்து ஆராயப்பட்டு வரும் அதேவேளை 12 வருடங்களுக்கு முன் பாகிஸ்தானிலிருந்து தருவிக்கப்பட்டிருந்த தூக்குக் கயிற்றினையும் பரிசோதித்து, தேவைப்பட்டால் புதிய கயிறு வெளிநாட்டிலிருந்து கொள்வனவு செய்வதற்கான ஏற்பாடும் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, தூக்கிலிடுபவருக்கான (அலுகோசு) பதவிக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment