டி.ஏ ராஜபக்ச நினைவக மீள் நிர்மாணத்தின் போது பொது மக்கள் நிதியை முறைகேடாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டின் அடிப்படையிலான தனக்கெதிரான வழக்கை விசேட உயர் நீதிமன்றம் விசாரிக்க முடியாது எனவும் அதற்கு சட்டத்தில் இடமில்லையெனவும் கோட்டாபே முன் வைத்த ஆட்சேபனை நிராகரிக்கப்பட்டுள்ளது.
மெதமுலனயில் குறித்த நினைவகத்தை அமைக்க 49 மில்லியன் ரூபா முறைகேடாகப் பயன்படுத்தியதாக கோட்டாபே உட்பட ஆறு பேருக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இந்நிலையில், சட்டத்திருத்தத்துக்கமைவாக விசேட நீதிமன்றத்துக்கு அதிகாரமில்லையென கோட்டாபே தரப்பில் வைக்கப்பட்ட வாதத்தை நிராகரித்துள்ள நீதிமன்றம் எதிர்வரும் 22ம் திகதி விசாரணைக்கான தேதியை அறிவித்துள்ளமை குறிப்பிடத்தகக்து.
No comments:
Post a Comment