ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி இணைந்தாலும் இல்லாவிட்டாலும் அடுத்து வரும் தேர்தல்களில் பெரமுன பாரிய வெற்றியீட்டும் என நம்பிக்கை வெளியிட்டுள்ளார் பசில் ராஜபக்ச.
கடந்த ஒக்டோபர் முதல் இரு தரப்பும் நட்புறவு பாராட்டுகின்ற போதிலும் மைத்ரிபால சிறிசேனவை ஜனாதிபதி வேட்பாளராக்குவதில் பெரமுன உடன்படுவதற்கான சாத்தியக்கூறுகள் இல்லாத நிலை தொடர்கிறது. எனினும், மூன்று மாதங்களாக ஒற்றுமை தொடர்கின்ற அதேவேளை அவ்வப்போது பேச்சுவார்த்தைகளும் இடம்பெற்று வருகிறது.
இந்நிலையில், சுதந்திரக் கட்சி சேர்ந்தாலும் இல்லாவிட்டாலும் மக்கள் ஆதரவு பெரமுனவுக்கே இருப்பதாக பசில் ராஜபக்ச தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment