பாக் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து தாக்குதல் நடாத்த முயன்ற இந்திய விமானம் தாக்குதலுக்குள்ளானதையடுத்து உயிர் தப்புவதற்காக விமானத்திலிருந்து குதித்திருந்த விமானி பாக் இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டிருந்தார்.
தென்னிந்தியா, தமிழகத்தைச் சேர்ந்த அபிநந்தன் என அறியப்படும் குறித்த விமானியை தற்போது நல்லெண்ண அடிப்படையில் விடுவிக்க இணக்கம் வெளியிட்டுள்ளது பாகிஸ்தான்.
தமது நாடு யுத்தத்தை எதிர்கொள்ளத் தயார் நிலையில் இருப்பதை உணர்த்தவே பதில் தாக்குதல் நடாத்தப்பட்டதாகவும் யுத்தம் உருவாவதை விட பேச்சுவார்த்தை மூலம் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணவே தாம் விரும்புவதாகவும் தெரிவித்திருந்த பாக் பிரதமர் இம்ரான் கான், தற்போது விமானியை நாளை வெள்ளிக்கிழமை விடுவிக்கவுள்ளதாக அறிவித்துள்ளது.
தேர்தலை அடிப்படையாகக் கொண்ட உணர்ச்சியூட்டலுக்காகவே இந்திய அரசு போர்ச்சூழலை உருவாக்க முனைந்ததாக பரவலான குற்றச்சாட்டுகள் வெளியிடப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment