2014 அளுத்கம வன்முறையின் அடிப்படையாக அமைந்த, பௌத்த தேரர் மீதான தாக்குதல் விவகாரத்தின் பின்னணியில் இடம்பெற்று வந்த வழக்கிலிருந்து மூன்று முஸ்லிம் இளைஞர்களையும் விடுதலை செய்ய உத்தரவிட்டுள்ளார் களுத்துறை மஜிஸ்திரேட் சந்திம எதிரிமான்ன.
மௌலவி அஸ்கர் மற்றும் சகோதரர்கள் அர்சாத், அப்லால் ஆகியோரே தர்கா டவுன், விஜேராம விகாரையின் அயகம சமித்த தேரர் மற்றும் அவரது சாரதியைத் தாக்கியதாக முன்னர் குற்றஞ்சாட்டப்பட்டிருந்தது. எனினும் சாட்சியங்களின் ஒன்றுக்கொன்று முரணான விளக்கங்களை அடிப்படையாக வைத்து ஜனாதிபதி சட்டத்தரணி எம்.எம். சுஹைர் தலைமையிலான முஹம்மத் இஸ்ஹார், எம்.ஐ.எம். நலீம், எம். அஸ்லம் ஆகியோரடங்கிய சட்டத்தரணிகள் குழு முன் வைத்த வாதங்களை ஏற்றுக்கொண்ட நீதிபதி வழக்கிலிருந்து முஸ்லிம் இளைஞர்களுக்கு விடுதலையளித்துள்ளார்.
குறித்த சம்பவத்தை அடிப்படையாக வைத்தே அளுத்கம வன்முறை நடாத்தப்பட்டு உயிரிழப்புகளும் ஏற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
-M. Minzar
-M. Minzar
No comments:
Post a Comment