டுபாயில் கைது செய்யப்பட்டுள்ள மாகந்துரே மதுஷுக்கு கட்டாயம் மரண தண்டனை வழங்கப்பட வேண்டும் என தெரிவிக்கின்ற நாமல் குமார தூக்கிலிடும் பணியை தான் செய்யத் தயார் என்கிறார்.
இலங்கையில் மரண தண்டனை நிறைவேற்றுவதற்கு ஆள் இல்லையென கடந்த காலங்களில் கூறப்பட்டு வரும் நிலையில் மதுஷ் போன்ற நபர்களை தூக்கிலிட தான் முன்வரத் தயார் என்கிறார் நாமல் குமார.
ஜனாதிபதி கொலைத் திட்டத்தை வெளிப்படுத்திய பொலிஸ் உளவாளி நாமல், மஹிந்த ராஜபக்சவின் கட்சியில் இணைந்து தேர்தலில் போட்டியிடும் எண்ணத்தையும் வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment