4 கோடி ரூபா இறக்குமதி வரி மோசடி விவகாரத்தில் பசால் அஹமட் எனும் நபருக்கு விளக்கமறியல் வழங்கப்பட்டுள்ள நிலையில் அவருக்கு உதவியதாகக் கருதப்படும் இரு சுங்கத் திணைக்கள அதிகாரிகளுக்கு கட்டாய விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
கொழும்பு மஜிஸ்திரேட் நீதிமன்றில் இன்று விசாரணை செய்யப்பட்ட வழக்கில் குறித்த நபருக்கு முதலில் பிணை வழங்கப்பட்டிருந்த போதிலும், பின்னர் சட்டவிதிகள் ஆராயப்பட்டு விளக்கமறியல் வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் சுங்க அதிகாரிகளுக்கு கட்டாய விடுமுறை வழங்கப்பட்டு அவர்கள் தொடர்பில் சுங்கத் திணைக்களம் விசாரணையை நடாத்தவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
Related news: https://www.sonakar.com/2019/02/blog-post_742.html
Related news: https://www.sonakar.com/2019/02/blog-post_742.html
1 comment:
கட்டாய விடுமுறை வழங்கப்பட்ட அதிகாரிகள் சிங்களவர்கள் போல் தெரிகிறது.அதனால் தான் பெயர்கள் இல்லாமல் இருக்கின்றது.
Post a Comment